தூங்கும்போது அடிக்கடி கட்டிபிடித்தால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? - இதோ ஆய்வின் முடிவுகள்!

United States of America
By Vinothini Aug 07, 2023 10:18 AM GMT
Report

கணவன் மனைவி கட்டிப்பிடித்து கொண்டால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

உளவியல் துறை ஆய்வு

கடந்த 2005ம் ஆண்டு, நார்த் கரோலினா பல்கலைக்கழகத்தின் உளவியல் துறை, அடிக்கடி கட்டிபிடித்துக்கொள்வதால் உடலில் னேஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அடிக்கடி கட்டிபிடித்தால் உடலில் லவ் (or) ஹாப்பி ஹார்மோன் ஆன ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கும்.

hugging-while-sleeping-benefits

இதனால் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ரத்த அழுத்தம் குறைந்து இதைய துடிப்பு சமநிலையாக இருக்க உதவும். மேலும், கட்டிப்பிடிப்பது என்பதே பலருக்கு ஒரு சிகிச்சையாக இருந்துவருகிறது. இதனால் நோய்யெதிர்ப்பு மண்டலம் வலுவாகும், கார்டிசோலின் என்ற மன அழுத்த ஹார்மோன் வெளியீட்டை குறைக்க உதவும் என்று கூறுகின்றனர்.

நன்மைகள்

இதனை தொடர்ந்து, கட்டிப்பிடிப்பது ஒரு நபரை நேசிக்க மற்றும் அவரை நாம் சிறப்பு வாய்ந்தவராக உணர வைக்கிறது. குடும்பனத்தினர் மற்றும் நந்நபர்கள் இடையே அடிக்கடி கட்டிப்பிடித்தால் அது ஒரு நபருக்கு தன்னம்பிக்கையை கொடுக்கும்.

hugging-while-sleeping-benefits

மேலும், காலையில் இருந்து மாலை வரை பல்வேறு பணிகளை முடித்த பிறகு, நிச்சயமாக நமது தசைகள் இறுக்கமாக உணரத்துவங்கும். நிச்சயம் அதற்கு ஒரு தளர்வு தேவை, அதனால், ஒரு நாளைக்கு நான்கு முறை கட்டிப்பிடிப்பது உங்கள் இறுகிய தசைகளை தளர்த்த உதவுகிறது என்று குடும்ப நல நிபுணரான வர்ஜீனியா சடிரின் கூறியுள்ளார்.