இனி இந்த பகுதிக்கு டிரெக்கிங் செல்லலாம்? அப்போ இதை பண்ணுங்க போதும்!
தமிழ்நாடு அரசு சார்பில் மலையேற்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் நாட்டின் முன்னோடி மாநிலமாக உள்ளது. குறிப்பாக நீலகிரி ,கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி போன்ற இடங்கள் பிரபலமானவை .
அன்மையில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பாதையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாகத் தமிழக அரசு மலையேற்றத்திற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் மலையேற்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
வெள்ளியங்கிரி மலை, குரங்கனி, சாம்பலாறு ,ஏலகிரி ,சுவாமி மலை ,குற்றாலம்,செண்பக தேவி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட 40 வனப்பகுதிகளில் மலையேறத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மலையேற்திற்கான முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முன்பதிவு
மேலும் 18 வயதிற்குப்பட்டவர்கள் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் ஒப்புதல் கடிதத்துடன் மலையேற்றம் மேற்கொள்ளலாம் . இந்த பயணத்தில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எளிதான மலையேற்ற பாதைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இதற்கு முன்பதிவு செய்ட (www.trektamilnnadu.com)மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கட்டணம் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.