தனது திருமணத்திலேயே லேப்டாப்பில் வேலை பார்த்த மணமகன் - வைரல் வீடியோ!
திருமணத்தின்போது மணமகன் லேப்டாப்பில் வேலை பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.
மணமகன் செயல்
ஏஐ ஸ்டார்ட்அப்-பின் இணை நிறுவனர், கேசி மேக்ரெல். இவர் தனது திருமணத்தில் லேப்டாப்பில் வேலை செய்துள்ளார். அவர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல்
அமர்ந்து வேலை செய்யும் வீடியோவை அவருடன் பணிபுரியும் டோரே லியோனார்ட் என்பவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், திருமணத்தில் விருந்தினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, தனது லேப்டாப்பில் வேலைபார்த்துக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.
வைரல் வீடியோ
இந்நிலையில், இதனை ஏஐ ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான டோரே லியோனார்ட் இந்த புகைப்படத்தை அவரது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், திருமணம் நடைபெறவிருந்த அதே நேரத்தில் ஒரு அவசர வேலை வந்ததால் வேறுவழியின்றி தனது வாழ்க்கையின் முக்கியமான நாளில் மேக்ரெல் அந்த வேலையை முடிக்க வேண்டிய சூழல் உருவாகி இருந்தது என்று குறிப்பிட்டு அவரது செயலை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்த புகைப்படம் வெளியாகி பணியிட எதிர்பார்ப்புகள், அர்ப்பணிப்பு மற்றும் சோர்வு சம்பந்தப்பட்ட விவாதங்களை கிளப்பியுள்ளது.