பேய்கள் இருக்கிறதா? அறிவியல் ஆய்வின் முடிவு - ஆச்சர்ய தகவல்!
பேய்கள் குறித்த அறிவியல் ஆய்வு முடிவொன்று வெளியாகியுள்ளது.
பேய் இருக்கா? இல்லையா?
அமெரிக்காவின் தென் கரோலினா பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் பேரி மார்கோவ்ஸ்கி பேய்கள் நிஜமா என்பது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். அபேய்கள் இருப்பதாக பலர் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கையின் பின்னணியில் அவர்களுக்கு நடந்த விசித்திரமான சம்பவங்கள், பறக்கும் புத்தகங்கள், விளக்குகள் தானாகவே எரிந்து அணைதல், விசித்திரமான ஒலிகள், நடப்பது போன்ற சத்தங்கள் போன்ற நிகழ்வுகள் உள்ளது.
அறிவியல் உண்மை
இயற்பியல் தொடர்பான பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, பேய்கள் இல்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. மனிதன் இறந்த பிறகு அவர்களது எந்த பாகமும் அழியாமல் இருப்பதில்லை. மக்கள் சில பதிவுகளை கொண்டு அவற்ரை பேய்களோடு தொடர்புபடுத்தும் பெரும்பாலான சம்பவங்கள் சூழ்நிலையின் தவறான மதிப்பீடு அல்லது சூழ்நிலையைப் பற்றிய தவறான புரிதல் காரணமாகும்.
பல நேரங்களில், மங்கலான விளக்குகள், மன எண்ணங்கள், பயம், குறைவான தூக்கம் போன்றவற்றால், மக்கள் தங்கள் முன் ஏதோ விசித்திரமானதைக் கண்டதாக உணரலாம். பேய்கள் இல்லை, மனிதர்களின் மனம்தான் சில சூழ்நிலைகளால் அவனை பயமுறுத்துகிறது என தெளிவாக விளக்கமளித்துள்ளார்.