பழைய தங்க நகைகள் புதிது போல் ஜொலிக்க.. இந்த 3 பொருள் போதும்!
தங்க நகைகளை எத்தனை வருடங்கள் ஆனாலும் அதன் தனித்துவம் மாறாமல் மாறாமல் அப்படியே இருக்கும்.
தங்க நகை
பணத்தைச் சரியான வழியில் முதலீடு செய்ய வேண்டும் என்ற முறையில் பலரும் தேர்வு செய்வது தங்க முதலீடு தான் . தற்பொழுது அண்டை நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது .இதனால் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதன் மீதான மதிப்பை அதிகரித்துக்கொண்டே போகிறது.
குறிப்பாக நடுத்தர குடும்பங்களுக்குத் தங்கம் தான் பாதுகாப்பான ஆதாரமாக உள்ளது.இதனால் நகை சீட்டுப் போட்டு சீறுக சிறுக சேர்த்து வைக்கும் தங்க நகைகளை அவ்வப்போது சுத்தம் செய்து புதிதாக வைத்துக்கொள்வது அவசியம். அப்போதுதான் தங்க நகைகளை எத்தனை வருடங்கள் ஆனாலும் அதன் தனித்துவம் மாறாமல் அப்படியே இருக்கும்.
அப்படி நாம் அன்றாட அணியும் நகைகள் மட்டுமன்றி அணியாத நகைகளையும் புதிதாகவே வைத்துக்கொள்ள உதவ இந்த எளிய வழிமுறையைப் பின்பற்றிப் பாருங்கள்.. அரை லிட்டர் தண்ணீர் நிரம்பக் கூடிய பவுல் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
எளிய வழிமுறை
அதில் வெதுவெதுப்பான நீரால் நிரப்பவும்.அதன் பிறகு அதில் வாஷிங் லிக்விட் அல்லது ஷாம்பூ ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். இப்போது இந்த தண்ணீரில் உங்கள் நகைகளைப் போடுங்கள்.
அதை அப்படியே 10 முதல் 15 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள்.பின்பு பிரெஷ் பயன்படுத்தி ஓரங்களில் இருக்கும் அழுக்குகளை தேய்த்து எடுங்கள். இதனையடுத்து சுத்தமான நீரில் அலசுங்கள். பிறகு மென்மையான துணி பயன்படுத்தி ஈரத்தை ஒட்டி எடுங்கள்.அவ்வளவுதான் உங்கள் நகை புதிதுபோல் ஜொலிக்கும்.