சுற்றுலாப் படகில் சென்ற 13 பேர்..அடுத்தடுத்து மடிந்த உயிர்கள் - நடுக்கடலில் கேட்ட மரண ஓலம்!
சுற்றுலாப் படகில் சென்ற 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள இந்தியா கேட் பகுதியிலிருந்து நேற்று மாலை 110க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளுடன் சொகுசுப் படகு ஒன்று எலிபெண்டா தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்தது.இந்த படகு அதிக வேகத்தில் 8 கிலோ மீட்டர் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென சிறிய ரக படகு ஒன்று பயணிகளுடன் சென்ற சொகுசு படகு மோதியது.இதில், பலத்த சேதம் அடைந்த சொகுசுப் படகு நீரில் மூழ்கியது.இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலாப் பயணிகள் கதறிக் கூச்சலிட்டனர்.
படகு விபத்து
இந்த சம்பவம் குறித்து கடற்படை, கடலோர காவல்படை, துறைமுக ஊழியர்கள், காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வருவதற்குள் 10க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தொடர்ந்து ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் களமிறங்கி 101 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
சிலர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.மேலும் சொகுசுப் படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் லைப் ஜாக்கெட் அணிந்திருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.