உச்சம் தொடும் வெயில்; மக்களே வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க..

Tamil nadu TN Weather Weather
By Sumathi Mar 17, 2024 02:53 AM GMT
Report

இன்று இயல்பை விட வெப்பம் உச்சமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெயில் தாக்கம்

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் மோசமான வானிலை நிலவியது.

உச்சம் தொடும் வெயில்; மக்களே வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க.. | Hot Weather Today Update In Tamilnadu

குறிப்பாக மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த வருடம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொளுத்தும் வெயில்; ஏன் இப்படி - என்ன செய்யலாம்?

6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொளுத்தும் வெயில்; ஏன் இப்படி - என்ன செய்யலாம்?

அதிகரிக்க வாய்ப்பு

இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நேற்று 39 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையை கடந்தது.

tn weather

இதில் கவலை என்னவென்றால் உண்மையான கத்ரி வெயில் இன்னும் தொடங்க வில்லை. முதல்கட்டமாக சென்னை, மதுரை, வேலூர், தஞ்சை, திருச்சி, நெல்லை, நாமக்கல்லில் வெயில் உச்சத்தை தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.