ஓரினச்சேர்க்கை ஆசையால் கொடூரம்; 2 நாளில் திருமணம் வேறு.. சிக்கிய ஐடி ஊழியர்!
ஓரினச்சேர்க்கை ஆசையால் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஓரினச்சேர்க்கை
கோவை, கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆபாச செயலியில் ஓரினச்சேர்க்கையில் விருப்பம் உள்ளவர்களிடம் சாட்டிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், இளைஞர் ஒருவருடன் அறிமுகமாகி தனிமையில் சந்திக்க விரும்பி சரவணம்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பின்புறம் புதர் அருகே வருமாறு அழைத்துள்ளார்.
சிக்கிய இளைஞர்
அந்த இளைஞரும் இவர் கூறியபடி அங்கு வந்துள்ளார். அப்போது திடீரென அங்குள்ள புதர் மறைவில் இருந்து மற்றொரு இளைஞர் வந்துள்ளார். உடனே இவர் அழைத்து வந்த இளைஞரும் அவருடன் சேர்ந்து இவரை சரமாரியாக தாக்கி ஆடைகளை எடுத்துக்கொண்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து அந்த ஐ.டி ஊழியர் புகார் அளித்ததன் பேரில் நடத்திய விசாரணையில், ஐ.டி ஊழியருக்கு இன்னும் ஓரிரு நாட்களில் திருமணம் நடக்க இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.