ஓரினச்சேர்க்கை.. ஒரே நேரத்தில் எச்ஐவி, குரங்கம்மை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர்!
ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட நபர் கொரோனா, குரங்கு அம்மை, எச்ஐவி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஓரினச்சேர்க்கை
36 வயதான இத்தாலியர், ஸ்பெயினுக்கு சென்று திரும்பிய பிறகு, காய்ச்சல், தொண்டை வலி, தலைவலி, இடுப்பில் வீக்கம் என பல உடல் உபாதைகளை அனுபவித்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட சில மணிநேரங்களில், அவரது இடது கையில் அரிப்பு ஏற்பட்டது.
பின்னர் அவரது உடலில் கொப்புளங்கள் தோன்றின. சிசிலியின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நகரமான கேடானியாவில் உள்ள மருத்துவமனைக்கு அவர் உடனடியாக அழைத்துச் செல்லப்பட்டார்.
3 வைரஸால் பாதிப்பு
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கோவிட், எய்ட்ஸ் மற்றும் குரங்கம்மை என மூன்று நோய்கள் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் நடத்திய விசாரணையில் அவர் ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற 5 நாளில் பல்வேறு ஆண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் அவர் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதன்மூலம் அவருக்கு எச்ஐவி மற்றும் குரங்கு அம்மை நோய் பரவி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
முதல்முறை...
இந்நிலையில் அந்த நபர் கொரோனா மற்றும் குரங்கு அம்மையில் இருந்து மீண்டார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது வீடு திரும்பிய நபர் தனிமையில் உள்ளார்.
இந்த மூன்று நோய்களுக்கும் காரணமான வைரஸ் ஒருவரை அதுவும் ஒரே நேரத்தில் தாக்கி பாதிப்பு ஏற்படுத்தியிருப்பது இதுவே முதல்முறை. இச்சம்பவம், அந்நாட்டு ஆராய்ச்சியாளர்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.