ஓரினச்சேர்க்கை... வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற ஜோடி!
ஓரினச்சேர்க்கை ஜோடி, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓரினச்சேர்க்கை
பிரிட்டனில், பாரி ட்ரெவிட் பார்லோ மற்றும் டோனி டிராவிட் பார்லோ என்பவரை 1999ஆம் ஆண்டு மணந்தார். அவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். பின்னர் இருவரும் பிரிந்தனர். அதனைத் தொடர்ந்து, பாரி தனது மூத்த மகளின் காதலனான ஸ்காட் ஹட்சின்சன் என்பவரை காதலிக்க தொடங்குகிறார்.
2019 ஆம் ஆண்டு இவர், தனது ஓரின சேர்க்கை காதலரான ஸ்காட் ஹட்சின்சன் (வயது 25), உடன் வாழத் தொடங்கினார். இந்த ஜோடிக்கு அக்டோபர் 2020, இதே போன்று வாலண்டினா என்ற மகள் பிறந்த நிலையில், இப்போது ஆகஸ்ட் 12 அன்று வாடகைத் தாய் மூலம் ஒரு மகனைப் பெற்றனர்.
குழந்தை பெற்ற ஜோடி
தனது மகனுக்கு ரோமியா என்று பெயரிட்டுள்ளார். பாரி மற்றும் டோனி இருவரும் £157 மில்லியன் மதிப்புள்ள சொத்துக்களை கொண்டுள்ளனர். ஏழு குழந்தைகளின் தந்தையான பாரி, தனது அனைத்து குழந்தைகளுக்கும் ஆடம்பரமான வாழ்க்கையை வழங்க விரும்புவதாக கூறினார்.
தனி சமையல்காரர், முழு நேர பராமாரிப்பாளர்கள், வீட்டு ஊழியர்கள், முழு நேர முடி ஒப்பனையாளர் என பலர் குழந்தைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தாய் இல்லாமல் தந்தை இருவர் என்ற அந்தஸ்தைப் பெறும் முதல் ஓரினச்சேர்க்கை ஜோடி.
இவர்களுடையே குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ்களிலும் இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இதன்மூலம் பிரபலமான இந்த ஜோடி, தற்போது வாடகை தாய் மூலம் குழந்தைப் பெற்று மீண்டும் பேசுப் பொருளாய் ஆகியுள்ளனர்.