தடுப்பூசியால் எச்.ஐ.வி நோயை கட்டுப்படுத்தலாம் - முக்கிய தகவல்!
தடுப்பூசிகளால் எச்.ஐ.வி பரவலை கட்டுப்படுத்தலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
எச்.ஐ.வி பரவல்
உலகளவில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது.
பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணமாகாதவர்களிடையேதான் அதிகரிக்கிறது.
எய்ட்ஸ் பெரும்பாலும் அதிகப்படியான போதைப் பழக்கம் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு ஆகியவற்றால் ஏற்படுகிறது. இந்த வைரஸுக்கு பொருத்தமான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தடுப்பூசி
இந்நிலையில் தென் ஆப்பரிக்கா மற்றும் உகாண்டாவில், 5 ஆயிரம் பெண்களை 3 குழுக்களாக பிரித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒரு பிரிவினருக்கு Lenacapavir தடுப்பூசியும், மற்ற இரு பிரிவினருக்கு 2 விதமான மாத்திரைகளும் கொடுக்கப்பட்டது.
இதில், தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஒருவருக்கு கூட ஹெச்.ஐ.வி.தொற்று ஏற்படவில்லை.
அடுத்த 2 மாதங்களுக்குள் இந்த தடுப்பூசியை விற்பனைக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.