எய்ட்ஸ் பாதித்த பெண்; பல்லாயிரம் பேருக்கு வைரஸ் பரவல் - பகிரங்க அழைப்பு விடுத்த நாடு!
எய்ட்ஸ் பாதித்த பெண்ணால் பல்லாயிரம் பேருக்கு வைரஸ் பரவும் அபாயம் எழுந்துள்ளது.
எய்ட்ஸ் பாதிப்பு
அமெரிக்கா, ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் லிண்டா லெக்செஸ். இவர் பாலியல் தொழிலாளியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளார்.அதுகுறித்து அவரும் அறிந்துள்ளார்.
ஆனால், வருமான நோக்கில் தனது பாலியல் சேவையை தொடர்ந்திருக்கிறார். . தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் ஹெச்ஐவி பரப்பியுள்ளார். ஐந்து மாதங்களில் 200க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் பாலியல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
சோதனைக்கு அழைப்பு
200 பேர் வாயிலாக கடந்த 2 ஆண்டுகளில் பல்லாயிரம் பேருக்கு, வைரஸ் பரவியிருக்கலாம் என்றுக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அப்பெண்ணுடன் பாலியல் ரீதியாக தொடர்பில் இருந்தவர்கள் தாமாக முன் வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுமாறும் அங்கே பகிரங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மாகாண சட்டப்படி இது மூன்றாம் நிலை குற்றம் என்ற வகையில் சேருகிறது. இதனையடுத்து புளோரிடாவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 211 நபர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு தங்களை உட்படுத்தி இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு பரப்பலை தொடர்ந்து வருகிறார்கள்.