எய்ட்ஸ் நோய் அதிகரிப்பு; அதுவும் இந்தியாவில்.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்!
எச்ஐவி பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
எச்ஐவி பாதிப்பு
உலகளவில் 40 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து முயற்சிகளை செய்து வருகிறது.
இந்நிலையில், பெங்களூருவில் கடந்த சில மாதங்களாக எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருமணமாகாதவர்களிடையேதான் அதிகரிக்கிறது. மாநிலத்தில் 1.85 லட்சம் பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை கவலை
இதில் புதுமணத் தம்பதிகள் தான் அதிகம். 20 முதல் 25 சதவீதம் இளைஞர்கள், 14 வயதுட்பட்டவர்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர். மல்லேஸ்வரம் கே.சி.பொது மருத்துவமனையில் மட்டும் கடந்த ஓராண்டில் 18,555 பேருக்கு எச்ஐவி இருப்பதாக சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.
இதில், 267 பேர் நேர்மறையாக இருப்பதும், 12 கர்ப்பிணிப் பெண்களுக்கு தொற்று இருப்பதும் தெரியவந்துள்ளது. எய்ட்ஸ் பெரும்பாலும் அதிகப்படியான போதைப் பழக்கம் மற்றும் பாதுகாப்பற்ற உடலுறவு ஆகியவற்றால் ஏற்படுகிறது.
இந்த வைரஸுக்கு பொருத்தமான மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.