இப்படி கூடவா நடக்கும்? தவறுதலாக அழுத்திய பட்டன் - விழுந்த ரூ.8 கோடி பரிசு!

United States of America Lottery World
By Jiyath Apr 06, 2024 11:57 AM GMT
Report

பெண் ஒருவருக்கு தவறுதலாக அழுத்திய பாட்டனால் லாட்டரியில் ரூ.8 கோடி பரிசு கிடைத்துள்ளது 

லாட்டரி சீட்டு

அமெரிக்காவின் கிறிஸ்டியன் பர்க் பகுதியைச் சேர்ந்தவர் மிரியம் லாங்க். இவர் கடந்த 18-ம் தேதி மெகா மில்லியன் லாட்டரி சீட்டு வாங்க ஒரு விற்பனையகத்துக்கு சென்றார். அங்கு வெர்ஜினியா லாட்டரி வாங்குவதற்காக பல விருப்பங்கள் உள்ளன.

இப்படி கூடவா நடக்கும்? தவறுதலாக அழுத்திய பட்டன் - விழுந்த ரூ.8 கோடி பரிசு! | Hits Wrong Button Lottery Winning Rs 8 Crore

ஆனால், லாட்டரி விற்பனை எந்திரத்தில் மெகா மில்லியன் லாட்டரியை வாங்குவதற்கு பதிலாக, பவர் பால் லாட்டரி பொத்தானை மிரியம் லாங்க் தவறுதலாக அழுத்தினார். இந்த பவர் பால் லாட்டரி டிக்கெட் எண் பொருந்தும் சீட்டானது, அதிகபட்ச எண்ணிக்கையுடன் பொருந்துபவர் பரிசை வெல்வார்.

நூதன எதிர்ப்பு.. பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் போலீசார் - பின்னணி என்ன?

நூதன எதிர்ப்பு.. பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் போலீசார் - பின்னணி என்ன?

ரூ.8 கோடி

இந்நிலையில் தவறாக பவர் பால் லாட்டரி பொத்தானை அழுத்திய மிரியம் லாங்கிற்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.8 கோடி) பரிசு கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியின் உச்சிக்கே சென்றார் மிரியம் லாங்க்.

இப்படி கூடவா நடக்கும்? தவறுதலாக அழுத்திய பட்டன் - விழுந்த ரூ.8 கோடி பரிசு! | Hits Wrong Button Lottery Winning Rs 8 Crore

இதுகுறித்து அவர் கூறுகையில் "இந்த லாட்டரியை வாங்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் தவறுதலாக பொத்தானை அழுத்தினேன். பவர் பால் லாட்டரி சீட்டு வந்தது. இதனால் தவிர்க்க முடியாமல் அதைத் தேர்ந்தெடுத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.