நூதன எதிர்ப்பு.. பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் போலீசார் - பின்னணி என்ன?

Germany World
By Jiyath Apr 06, 2024 11:06 AM GMT
Report

தங்களது எதிர்ப்பை தெரிவிக்க காவல் துறையினர் நூதன முறையில் செயல்பட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்துள்ளது.

காவல்துறை சீருடை

ஜெர்மனி நாட்டில் காவல்துறை நிர்வாகம் சார்பில் காவல் துறையினருக்கு சீருடை வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த 6 முதல் 8 மாதமாக சுழற்சி முறையில் வழங்கப்பட வேண்டிய சீருடை வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.

நூதன எதிர்ப்பு.. பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் போலீசார் - பின்னணி என்ன? | Germany Cops Make Duty Without Uniform Pants

இதனால் காவல்துறையினர் தங்களுக்கு ஆடைகளை கேட்டு அந்நாட்டு அரசுக்கு பலவிதமான அழுத்தம் அழுத்தங்கள் கொடுத்துள்ளனர். ஆனாலும் அவை பலனளிக்காமல் போயுள்ளது.

இந்தியாவில் ஒரு 'மினி தாய்லாந்து'.. அருவியும், அடர்ந்த காடுகளும் - எங்க இருக்கு தெரியுமா?

இந்தியாவில் ஒரு 'மினி தாய்லாந்து'.. அருவியும், அடர்ந்த காடுகளும் - எங்க இருக்கு தெரியுமா?

நூதன எதிர்ப்பு 

இதனால் சில காவலர்கள் நூதன முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.அவர்கள் பணிக்கு மேல் சட்டை மட்டும் அணிந்து கால் சட்டை அணியாமல் வருகை தந்து கவனத்தை ஈர்த்துள்ளனர். 

நூதன எதிர்ப்பு.. பேண்ட் இல்லாமல் பணிக்கு வரும் போலீசார் - பின்னணி என்ன? | Germany Cops Make Duty Without Uniform Pants

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், இந்த சம்பவம் அந்நாட்டில் வேடிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.