நான் கர்ப்பமாக இருக்கும் போது கண்டபடி பேசினாங்க - சின்மயி உருக்கம்..!

Tamil Cinema Chinmayi
5 நாட்கள் முன்

பிரபல பின்னணி பாடகி சின்மயிக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ள நிலையில் பல சினிமா பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சின்மயி உருக்கம்

வாடகைத்தாய் மூலமாகத்தானே குழந்தை பெத்துக்கிட்டீங்க என சில ட்ரோல்கள் மற்றும் டைரக்ட் மெசேஜ்கள் சின்மயிக்கு வந்த வண்ணம் இருந்துள்ளது.

நான் கர்ப்பமாக இருக்கும் போது கண்டபடி பேசினாங்க - சின்மயி உருக்கம்..! | Hinmayi Teased Me When I Was Pregnant

அவர் கர்ப்பமாக இருக்கும் போதே, திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகின்றதே எப்போதான் குழந்தை பெத்துப்ப என்றும், குழந்தை பெற்றுக் கொள்ளும் யோகமே உனக்கு இல்லை என்றும் ஏளனமாக சிலர் ட்ரோல் செய்தது குறித்தும் தற்போது உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அம்மாவான சின்மயி

பிரபல பின்னணி பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சின்மயி கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவிந்திரனை திருமணம் செய்து கொண்டார்.

நான் கர்ப்பமாக இருக்கும் போது கண்டபடி பேசினாங்க - சின்மயி உருக்கம்..! | Hinmayi Teased Me When I Was Pregnant

கடந்த 8 ஆண்டுகளாக இருவருக்கும் குழந்தை பிறக்கவில்லை. அதன் காரணமாக சின்மயி தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வந்தார்.

இந்நிலையில், தற்போது ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார் சின்மயி.

பாடகி சின்மயி தனது சமூக வலைதள போஸ்ட்டில் கர்ப்பமாக தான் இருக்கும் போதே, சில நெட்டிசன்கள் திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகின்றதே உங்களுக்கு ஏன் குழந்தை பிறக்கவில்லை என வில்லங்கமாக ட்ரோல்களை செய்து மனசை ரொம்பவே கஷ்டப்படுத்தினார்கள் என்றும் குறிப்பிட்டு உருக்கமாக பதிவிட்டுள்ளார். 

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.