நான் கர்ப்பமாக இருப்பதும் இல்லாததும் எனது குடும்ப விஷயம்! பாடகி சின்மயி காட்டம்!
பிரபல பாடகி சின்மயி தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்கள் குறித்து தற்போது அவரே விளக்கமளித்துள்ளார்.
பாடகி சின்மயி சமீபத்தில் தனது கணவர் ராகுல் ரவீந்திரன் உடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அந்த புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
அதில் சின்மயி சற்று உடல் எடை கூடியது போல் தோற்றமளித்தார். இதனை கண்ட பொதுமக்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக கதை கட்ட தொடங்கிவிட்டனர்.
இந்த கதை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, தற்போது சின்மயி காதுக்கு சென்றுள்ளது. இது குறித்து தற்போது அவர் விளக்கமளித்துள்ளார்.
அதில், இந்த யூடியூப் சேனல்களில் வரும் போலி செய்திகளால் நான் சோர்ந்துவிட்டேன் என்றும் நான் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்ததால் என் புடவை சற்று தளர்வாக இருந்ததால் அதில் அப்படி தெரிகிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் நிறையவற்றை நான் பகிர்ந்து கொள்ளவுமில்லை, அதற்கான அவசியமும் இல்லை என்றும் என் குடும்பத்தில் நடக்கும் நிகழ்வுகளை நான் சமூக வலைத்தங்களில் பகிரமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நான் நேரம் வரும் போது எனது கர்ப்பம் தொடர்பாக செய்தியை பகிர்ந்து கொள்வேன், தோனவில்லை என்றால் பகிரமாட்டேன் என்றும் அதிரடியாக
கூறியுள்ளார். நான் கர்ப்பமாக இருக்கும் வெளியாகும் செய்திகளால் சோர்ந்துவிட்டேன், ஆகையால் தயவுசெய்து அதை நிறுத்துங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார்.