8 வெளி நாடுகளை ஆட்சி செய்தது இந்து மன்னர்கள் தான் - எங்கெல்லாம் தெரியுமா?
உலகின் பல நாடுகள் இந்து மதத்தின் செல்வாக்கின் கீழ் இருந்தது தான்.
இந்து மன்னர்கள்
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தெற்காசியாவின் குறைந்தது 8 நாடுகளில் இந்து மதத்தின் செல்வாக்கு வலுவாக இருந்துள்ளது.
இந்து மதம் இந்திய பிராமணர்களால் இந்தோனேசியாவிற்கு கொண்டு வரப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து, முஸ்லீம் மதம் அங்கு சென்றடைந்தது. மன்னர்களைத் தொடர்ந்து, மக்களும் முஸ்லீம்களாக மாறினர். ஆனால் பாலி தற்பொழுதும் இந்து பெரும்பான்மை உள்ள பகுதியாகவே உள்ளது.
தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு தமிழர்கள் குடியேறியதன் காரணமாக இந்து மதம் பரவியிருக்கலாம். சோழப் பேரரசின் தென்னிந்தியத் தமிழர்களின் ஆட்சி இலங்கையில் இந்து மதம் வளர காரணமாக இருந்தது.
வியட்நாமில் பூர்வீக மதம் இந்து மதத்தைப் போலவே தெரிகிறது. 7ஆம் நூற்றாண்டிலிருந்து அல்லது அதற்கு முந்தைய காலத்தில் இந்துக் கோயில்கள் இங்கு இருந்துள்ளன.
கம்போடியா ஒரு காலத்தில் சிவனை வழிபடும் பெரும்பான்மையான இந்துக்கள் வாழ்ந்த நாடாக இருந்தது. இப்போது புத்த ஆதிக்கமாக மாறிவிட்டது.
ஆப்கானிஸ்தான் 6 ஆம் நூற்றாண்டு வரை இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியாக இருந்தது. 11 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான இந்து கோவில்கள் அழிக்கப்பட்டன அல்லது மசூதிகளாக மாற்றப்பட்டன.
தாய்லாந்தில் வலுவான இந்து மத செல்வாக்கு உள்ளது. பௌத்த மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. 84,400 இந்துக்கள் வாழ்கிறார்கள்.
பிலிப்பைன்ஸில் இந்து மதம் செல்வாக்கு பெற்றிருந்தது. இங்கு 351 பழமையான இந்துக் கோயில்கள் உள்ளன. பல இந்துக் கோயில்கள் அழிக்கப்பட்டுவிட்டன.
மாலத்தீவு 12ஆம் நூற்றாண்டு வரை இந்து மன்னர்களின் கீழ் இருந்தது. பின்னர் இது பௌத்தத்தின் மையமாகவும் மாறியது.