இந்து மத நூல்கள் எல்லாமே ஆபாசம் தான் - சர்சையில் சிக்கிய பிரபலம்
வங்கதேச எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் இந்து மதம் குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்து மதம்
வங்கதேச எதிர்க்கட்சியான கோனோ ஓதிகர் பரிஷத்தின் தலைவர்களில் ஒருவர் தாரிக் ரஹ்மான். தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் நூருல் ஹக் நூர் உடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்.
பேஸ்புக் நேரலையில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "இந்து மதத்தின் வேதங்கள் எந்த தார்மீக போதனைகளையும் வழங்கவில்லை.. இதில் இருக்கும் அனைத்து மத நூல்களும் ஆபாச கருத்துகளையே கொண்டுள்ளது" என்று ரஹ்மான் கூறியிருந்தார்.
ஆபாச நூல்கள்
அவரது இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், இந்தக் கட்சி பயங்கரவாத அமைப்பான ஜமாத்-இ-இஸ்லாமியின் ஆதரவாகச் செயல்படுவதாகவும் பயங்கரவாத அமைப்பின் ஆதரவும் அக்கட்சிக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.