நீங்க வந்தா மட்டும் போதும்..லட்சக்கணக்கில் கொட்டி கொடுக்கும் அரசு - எங்கெல்லாம் தெரியுமா?
உலகின் சில சிறந்த இடத்தில் தங்குவதற்கு அந்த நாடே பணம் கொடுக்கிறதாம்.. அப்படிப்பட்ட 5 இடங்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம், வாங்க.,
ப்ரெசிஸ்
இத்தாலி அருகே உள்ள ப்ரெசிஸ்( Presicce) என்ற இடத்தில் குடியேறுவதற்கு சுமார் 25 லட்சம் ரூபாய் அரசு தருகிறது. இங்கு பெரும்பாலானோர் வயதானவர்கள் என்பதால் மக்கள் தொகையை பெருக்க இத்தகைய திட்டம் போடப்பட்டுள்ளது.
ஆன்டிகிதெரா
கிரேக்க தீவு ஆன்டிகிதெரா, குடியேற முடிவு செய்த அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 50 ஆயிரம் அரசு வழங்கும். தற்போது இந்த தீவில் 50 பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
அல்பினென்
சுவிட்சர்லாந்தை சேர்ந்த அல்பினென். குடியேறும் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு அரசு ரூ.20 லட்சமும், தம்பதிகளுக்கு ரூ.40 லட்சமும் வழங்குகிறது. ஒரு குழந்தைக்கு ரூ.8 லட்சம். 10 ஆண்டுகளுக்கு இந்த இடத்தை விட்டு வெளியேறக் கூடாது என்ற விதிமுறையும் உள்ளது.
அலாஸ்கா
அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா. இங்கு தங்குபவருக்கு ஆண்டுதோறும் ஒன்றரை லட்சம் ரூபாய் அரசால் வழங்கப்படுகிறது. 1 வருடமாவது தங்க வேண்டும்.
பொங்கா
ஸ்பெயினில் உள்ள பொங்கா என்ற கிராமம். குடியேற உள்ளூர் அதிகாரிகளால் 1.5 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. வசிக்கும் போது குழந்தைகள் பிறந்தால், குழந்தைகளுக்கும் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது.