உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்கள்.. இந்த ஊரு இவ்வளவு மோசமான இடத்துலயா?

Tamil nadu Chennai India Vienna
By Sumathi Jul 06, 2022 04:35 AM GMT
Report

உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை மிகவும் மோசமான இடத்தை பிடித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

சிறந்த நகரங்கள்

எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது. மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு முந்தைய ஆண்டிற்கான

vienna

உலகளாவிய வாழ்வாதாரக் குறியீட்டிலிருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு, பசுமை திறந்த வெளி, அரசியல் ஸ்திரத்தன்மை, குற்ற விகிதங்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உள்ளிட்ட

ஐரோப்பிய நாடுகள்

பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் 173 நகரங்களை EIU வரிசைப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் 10 உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் பட்டியலில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்தாலும்,

இந்த ஆண்டு இந்திய நகரங்கள் மிகவும் மோசமாக இடத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன. முக்கியமாக பெங்களூரு 146 வது இடத்தைப் பிடித்து இந்தியாவிலேயே வாழத்தகுந்த சிறந்த நகரத்தின் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

மேலும், டெல்லி 112வது இடத்திலும், மும்பை 117வது இடத்திலும் உள்ளது. மேலும் அகமதாபாத் 143ல் உள்ளது. சென்னை நகரம் 142ல் உள்ளது குறிப்பிடதக்கது.

2022 இல் உலகெங்கிலும் உள்ள வாழக்கூடிய நகரங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள நகரங்கள்:

வியன்னா, ஆஸ்திரியா கோபன்ஹேகன், டென்மார்க் சூரிச், சுவிட்சர்லாந்து கால்கரி, கனடா வான்கூவர், கனடா ஜெனீவா, சுவிட்சர்லாந்து பிராங்க்பர்ட், ஜெர்மனி டொராண்டோ, கனடா ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து ஒசாகா, ஜப்பான் மற்றும் மெல்போர்ன், ஆஸ்திரேலியா (டை)

உலகெங்கிலும் உள்ள வாழக்கூடிய நகரங்களின் கடைசி 10 நகரங்கள்:

தெஹ்ரான், ஈரான் டவுலா, கேமரூன் ஹராரே, ஜிம்பாப்வே டாக்கா, பங்களாதேஷ் போர்ட் மோர்ஸ்பி, PNG கராச்சி, பாகிஸ்தான் அல்ஜியர்ஸ், அல்ஜீரியா திரிபோலி, லிபியா லாகோஸ், நைஜீரியா டமாஸ்கஸ், சிரியா  

பயிற்சி வகுப்பில் பழக்கம்.. 19வயது இளம்பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை!