ராவணன் பற்றியெல்லாம் பேச வேண்டாம் - ராகுல் காந்தியை தாக்கிய முதலமைச்சர்!
ராகுல்காந்தியை அசாம் முதல்வர் மறைமுகமாக சாடியுள்ளார்.
ராகுல்காந்தி
மேகாலயாவின் ரி போயில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தற்போது மேற்கொண்டு வருகிறார். அதில், அம்மாநில முதல்வர் மூலம் கடுமையான இடையூறுகள் கொடுக்கப்பட்டன.
அசாமில் நாகோனில் உள்ள ஒரு கோவிலை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்படாததால் அவர் பயண திட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டினார். இந்த தடங்கலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது.
முதல்வர் சாடல்
இதற்கிடையில், அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்றது. கோவில் கும்பாபிஷேகம் பிரதமர் மோடி , உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து, இன்று கோவில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மாவிடம், ராகுல் காந்தி கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற நிலையில், தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "ராவணனை பற்றி ஏன் பேசுகிறீர்கள். 500 ஆண்டுகள் கழித்து ராமரை பற்றி பேச இன்று நல்ல நாள். ராவணனை பற்றி பேச வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்.