ஏன் கல்யாணம் பண்ணிக்கல, க்ரஷ் யார்? ஸ்மார்ட்டா இருக்கீங்க - ராகுல்காந்தி என்ன சொன்னார் தெரியுமா?
திருமணம் குறித்த கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளித்துள்ளார்.
ராகுல்காந்தி
ராகுல் காந்தி ஜெய்ப்பூரில் இருக்கும் மகாராணி கல்லூரிக்குச் சென்றிருந்தார். அப்போது மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பேசிய மாணவிகள் சிலர், "நீங்கள் ஒருநாள் பிரதமராகிவிட்டால் என்ன செய்வீர்கள்?
அரசியல்வாதியாக இல்லாவிட்டால் என்னவாக இருந்திருப்பீர்கள்?" என்றனர். அதற்கு, இரண்டு விதமான பொருளாதாரம் இருக்கிறது. ஒன்று உற்பத்தி பொருளாதாரம். சீனா இதில் ஆதிக்கம் செலுத்துகிறது. எனவே நான் இந்தியாவில் அதை நிலைப்படுத்துவேன்.
திருமணம்?
அரசியல்வாதியாக இல்லாவிட்டால் ஆசிரியராக, உணவு சமைப்பவராக என பல ஐடியாக்கள் இருந்தன. ஆனால் அதில் ஏராளமான நடைமுறை சிக்கல்களும் இருக்கின்றன ந்றார். தொடர்ந்து, கல்லூரியில் உங்கள் க்ரஷ் யார், அறிவாளியாகவும், அழகாகவும் இருக்கிறீர்கள்.
ஆனால், திருமணம் குறித்து யோசிக்கவில்லை. உங்களுக்கு பிடித்த பயண இடம் என்ன, உங்கள் சருமத்தை அழகாக வைத்திருக்க என்ன செய்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, "ஏனென்றால் நான் எனது வேலையிலும் காங்கிரஸ் கட்சியிலும் முழுமையாகச் சிக்கிக்கொண்டேன்.
அதனால்தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை. நான் செல்லாத இடம், எனக்குப் பிடித்த இடம். புதிய இடங்களை நான் பார்க்க விரும்புவேன். எனக்கு பாகற்காய் மட்டும் பிடிக்காது. மேலும் பட்டாணி, கீரையும் பிடிக்காது. மற்ற அனைத்தையும் விரும்புவேன். என் முகத்தில் சோப்பு போடுவதில்லை. கிரீம்ஸ் தடவுவதில்லை. வெறும் தண்ணீரில் கழுவுவேன்" என சிரித்தபடி பதிலளித்துள்ளார்.