சீனத் தூதருடன் சேர்ந்து சாப்பிடும்போது.. ராகுல்காந்தி பேச்சு - பாஜக பதிலடி!
சீனா குறித்து ராகுல்காந்தி பேச்சுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.
ராகுல்காந்தி
லடாக்கின் கார்கில் பகுதிக்குச் சென்ற ராகுல் காந்தி பேரணி ஒன்றில் பேசும்போது, "நான் பான்காங் ஏரிக்கு சென்றபோது, ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் இந்திய நிலம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது.
இந்தியாவின் நிலம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது என்றும், பிரதமர் பொய் சொல்கிறார் என்றும் லடாக்கில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தெரியும்" என்று தெரிவித்திருந்தார்.
பாஜக கேள்வி
இது குறித்து பாஜக மாநிலங்களவை எம்.பி.யும், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான டாக்டர் சுதன்ஷு திரிவேதிரி கூறுகையில், "சீனாவுடனான அவர்களின் (காங்கிரஸ்) உறவையும், எங்களின் உறவையும் தெளிவுபடுத்த நாங்கள் விரும்புகிறோம்.
கடந்த 2020-ல் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்ததும், சீனாவில் உள்ள அறிவுஜீவி ஒருவர், தியனன்மென் சதுக்க நிகழ்வுக்கு பின்னர், சீனா ஒரு மோசமான தூதரக உறவில் பயணித்துக் கொண்டு இருக்கிறது.
ராகுல் காந்தி ஏன் சீனாவின் மீது இவ்வளவு அன்பினை வெளிப்படுத்துகிறார் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு பண உதவி கிடைத்ததாலா? ராகுல் காந்தி மக்கள் சொன்னதாக கூறுகிறார். யார் அந்த மக்கள்? டோக்லாம் மோதலின்போது சீனத் தூதருடன் அவர் இணைந்து உணவு சாப்பிட்டதை அவர் வெளியில் சொல்லவில்லை.
ஆனால், சீனாவால் ஒரு படம் பகிரப்பட்டிருந்தது. நேருவின் காலத்தில், அவர்கள் சீனாவுக்கு உணவும், உதவிகளும் அளித்துள்ளனர் என்று நேருவே ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். கடந்த 1962-ம் ஆண்டு அரசுடன் உதவியாக இருந்ததற்காக நேருவே ஆர்எஸ்எஸ்ஸை பாராட்டியுள்ளார். அப்படியானால் அவர் பொய் சொல்கிறாரா? நீங்கள் பொய் சொல்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.