ராகுல்காந்தி யாத்திரையில் பங்கேற்ற ஆசிரியர் - சஸ்பெண்ட் செய்த மாநில அரசு!
ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்துக் கொண்ட ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ராகுல்காந்தி யாத்திரை
கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைப்பயணத்தைத் தொடர்ந்தார். இது தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனாஸ்யாவில் உள்ள பழங்குடி விவகாரங்கள் துறையின் கீழ் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ராஜேஷ் கனோஜே என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனக்கு முக்கிய வேலை இருப்பதாக கூறி விடுப்பு எடுத்து யாத்திரையில் கலந்து கொண்டுள்ளார்.
ஆசிரியர் சஸ்பெண்ட்
இவர் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அரசு விதிமுறைகளை மீறி அரசியல் கட்சியின் ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளார். பொய்க்கூறி விடுப்பு பெற்று,
இந்த செயலில் ஈடுபட்ட ராஜேஷ் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனப் பழங்குடி விவகாரங்கள் துறை உதவி ஆணையர் என் எஸ் ரகுவன்ஷி தெரிவித்துள்ளார்.