முன்னாள் டிஜிபி வழக்கில் இருந்து நீதிபதி ஆனந்த் திடீர் விலகல் - என்ன காரணம்?
முன்னாள் டிஜிபி வழக்கில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதி விலகியுள்ளார்.
முன்னாள் டிஜிபி வழக்கு
தமிழ்நாடு முன்னாள் டிஜிபியும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான நட்ராஜ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து வாட்ஸ் அப் குரூப்களில் அவதூறு பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து, திமுக வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி சைபர் கிரைமில் புகார் அளித்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணை நடைபெற்றது.
நீதிபதி விலகல்
அதில், அதே வாட்ஸ் அப் குரூப்களில் தன்னை பற்றியும் அவதூறு பரப்பப்படுவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார். அதனையடுத்து, நட்ராஜ் அளிக்கும் புகார் மீதும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதனால் வேறு ஒரு நீதிபதி முன்பு இந்த வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.