நாள் முழுவதும் ஏசி ஓடுதா? இந்த பெரிய ஆபத்து நேரலாம் - இதை கவனீங்க!
24 மணி நேரமும் ஏசியை இயக்குவதற்கு பின் உள்ள ஆபத்துக்கள் குறித்து பார்க்கலாம்.
AC பயன்பாடு
நாள் முழுவதும் ஏசியை இயக்குவது உங்கள் மின்சார கட்டணத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், ஏசியை வெடிக்க வைக்கும் அபாயத்தையும் அதிகப்படுத்துகிறது.
தற்போது நிலவி வரும் வெயில்காலத்தில் உங்கள் ஏசியை பாதுகாப்பாக இயக்க சில டிப்ஸ்களை பார்ப்போம்.. AC-ஐ தொழில்நுட்ப வல்லுநர் கொண்டு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பராமரிப்பு செய்யுங்கள்.
ஏசியின் உட்புறத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் காம்போனென்ட்கள் சரியாக இயங்குகிறதா மற்றும் சுத்தமாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டியது அவசியம். AC வெளிப்புற யூனிட்டைச் சுற்றிலும் போதுமான இடம் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நிபுணர்கள் எச்சரிக்கை
24 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை ஏசிக்கும், உங்கள் மின் கட்டணத்திற்கும் ஏற்றது. தேய்மானம் மற்றும் கிழிந்த வயரிங் காணப்பட்டால் உடனே அதை மாற்ற வேண்டும். வெளிப்புற யூனிட் மீது நேரடி சூரிய ஒளி படும்படி வைக்க வேண்டாம்.
தீ அணைக்கும் கருவிகளை உங்கள் வீட்டில் வைத்திருங்கள். அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் ஏசியை தொடர்ந்து இயக்க வேண்டாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் இது அதிக வெப்பம் மற்றும் வெடிப்புகளுக்கு வழிவகுக்கும்.