சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி இடமாற்றம்..!

Government of Tamil Nadu
By Thahir Jun 12, 2022 11:08 AM GMT
Report

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

IAS அதிகாரிகள் இடமாற்றம்

தமிழக அரசு பல்வேறு துறை அதிகாரிகளை மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிரடி இடமாற்றம்..! | Health Secretary Radhakrishnan Action Transfer

சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகவரித் துறை முதன்மை செயலாளராக / ஆணையராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக பிரபாகரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர்கள் நலன் திறன் மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நசிமுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறை செயலாளராக ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த சிவராசு மாற்றப்பட்டு பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்ட ஆட்சியராக சாந்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் ஆட்சியராக ஜானி டாம் வர்க்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.