இது பதட்டத்திற்கான நேரம் இல்லை , ஒத்துழைப்பு இருந்தால் போதும் : ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்
தமிழகத்தில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு நேற்று தனது கடிதத்தில் மூலம் அறிவுறுத்தியுள்ளார்.
ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையது என விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ,தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொற்று பாதித்தவருடன் தொடர்பில் இருந்த ஏழு பேருக்கும் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையங்களில் தீவிரமாக பரிசோதனை செய்ய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் தலைதூக்க ஆரம்பித்துள்ளனர் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இரண்டு தவணை தடுப்பூசி சமூக இடைவெளி, கைகழுவுதல், முகக்கவசம் கட்டாயமாக அணிதல் உள்ளிட்ட பொது சுகாதார வழிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் இது பதற்றத்திற்கான நேரம் இல்லை. ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை மக்கள் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.