எரியுதுடி மாலா; தாண்டவமாடும் வெயில், இதை கட்டாயம் பண்ணனும் - டாக்டர்ஸ் டிப்ஸ்!
வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் மக்களை எச்சரித்துள்ளனர்.
வெயிலின் தாக்கம்
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஈரோட்டிலும் வேலூரிலும் 14 டிகிரி பாரன்ஹிட் கூடுதலாக பதிவாகியுள்ளது.
தொடர்ந்து, தமிழக உள் மாவட்டங்களில் இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரையும், தமிழகத்தில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், வெயில் அதிகரிக்கும் போது ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும் எனவே மே மாதம் முடியும் வரை மதியம் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வெளியில் செல்வதை தவிர்க்கவும். நோயாளிகள் கர்ப்பிணிகள் சற்று எச்சரிக்கையுடன் இருங்கள்.
மருத்துவர்கள் எச்சரிக்கை
ஐஸ் கட்டிகள், ஐஸ் வாட்டர், கார்பனேட் குளிர்பானங்கள் கண்டிப்பாக தவிர்க்கவும். காபி டீ இன்னும் ஒரு மாதத்திற்கு வேண்டாம். காலையில் சுடுநீரில் இஞ்சி போட்டு சாப்பிட்டு வர பித்தம் தணியும். முதலுதவி போல எலுமிச்சை எப்போதும் வீட்டில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
மாமிச உணவு, அதிக எண்ணெய் மற்றும் காரம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வெயிலில் இருந்து வந்தவுடன் சிறிது நேரம் சென்று வியர்வை தணிந்தவுடன் தண்ணீர் அருந்தவும். உடனே ஐஸ் வாட்டர் அருந்தினால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.