சுட்டெரிக்கும் வெயில்; உங்கள் காரை காப்பாத்தணுமா? இதை நோட் பண்ணுங்க..
வெயிலில் இருந்து உங்கள் காரை பாதுகாப்பது குறித்து பார்க்கலாம்..
வெயிலின் தாக்கம்
இந்தியாவின் பல பகுதிகளை வெப்ப அலை தாக்கி வருகிறது. வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக ஜூஸ் குடிப்பது, வெளியில் செல்லாமல் இருப்பது போன்றவற்றை முயற்சிக்கிறோம்.
அதே சமயம், காரைப் பற்றியும் கொஞ்சம் அக்கறைப்பட வேண்டும். கோடை காலத்தில் கார்களை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம்.
ஏசியின் வேகம் குறைவாக இருந்தாலோ அல்லது ஏதாவது கசிவுகள் இருந்தாலோ உடனடியாக மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும். கடுமையான வெப்ப அலை காரணமாக காரில் உள்ள திரவங்கள் கெட்டியாகவோ அல்லது ஆவியாகவோ வாய்ப்புள்ளது.
கார் பாதுகாப்பு
எனவே, இஞ்சின் ஆயில், பிரேக் ஆயில், இஞ்சின் கூலண்ட், பவர் ஸ்ட்ரிங் திரவம், விண்ட்ஷீல்ட் வைபர் திரவம், கியர் ஆயில் போன்றவற்றை சரியான அளவு இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கார் இஞ்சினின் வெப்பநிலை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.
இஞ்சினில் ஏதாவது கோளாறு இருந்தால் கார் பாதி வழியிலேயே பிரேக்டவுன் ஆகிவிடும். கார் இஞ்சினில் ஏதாவது கோளாறு இருந்தால் உடனே மெக்கானிக்கை அழைத்து சரி செய்யவேண்டும்.