வாட்டும் Heat Wave!! இப்படியே போச்சுன்னா இன்னும் 10 வருசத்துல - ஆய்வாளர் எச்சரிக்கை
இந்தியா முழுவதுமே hea twave எனப்படும் வெப்ப அலை மக்களை வாட்டி வதைக்கிறது.
வெப்ப அலை
கோடை காலம் துவங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நாட்டின் பல இடங்களிக்கும் வெப்ப அனல் மக்களை வீட்டிற்குள் முடக்கி போட்டுள்ளது. 100 டிகிரிக்கு மேல் நாட்டின் பல இடங்களிலும் வெயிலின் தாக்கம் சென்றுள்ளது.
நாட்டில் தேர்தல் பிரச்சாரங்களையும் பல இடத்தில் இது முடங்கியுள்ளது என்றே கூறலாம். இந்நிலையில், அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படம் ஒன்றில் நாடு முழுவதுமே Heat Wave வீசிவருவதை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
44.5 டிகிரிக்கு மேல் அதிகரித்து வெயிலின் தாக்கம் நாடு முழுவதும் வீசி வருவதை அப்புகைப்படம் காட்டுகிறது. இந்நிலையில் தான் இது போன்ற வெப்ப அலை இன்னும் 10 ஆண்டுகள் தொடர்ந்தால் ஏற்படும் பெரிய ஆபத்துகளை குறித்து ஆராய்ச்சியாளர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
இன்னும் 10 ஆண்டுகளில்
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், வெயிலின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கும் என கூறி, போகப் போகக் கூடுமே குறைய வாய்ப்பு இல்லை என்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மழைபொழிவு வந்ததை சுட்டிக்காட்டிய அவர் அதனையடுத்து வந்த கோடைக்காலத்தில் கடும் வறட்சி என தெரிவித்து, இதுதான் இன்றைய பிரச்சினை என விளக்கினார். வானிலை முற்றிலும் மாறிவிட்டதாக குறிப்பிட்ட 2030-ஆம் ஆண்டிற்குள் 45% நிலக்கரி மற்றும் பெட்ரோல் இல்லாத எரிவாயு பயன்பாட்டுக்குச் செல்வோம் என இந்தியா சொல்வதை போல உலகத்திற்கு நாம் அதை அடைந்து விடுவோமா? என்று வினவி அப்படி கேள்வி கேட்டால் நம்மிடம் பதிலில்லை என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இது இந்தியா போன்ற நாடுகளுக்கு மட்டுமின்றி தென் துருவ நாடுகளையும் பாதித்திருப்பதாக கூறி, ஒட்டுமொத்தமாகக் கீழ் அடுக்கு மற்றும் மேல் அடுக்கு மண்டலத்தையும் நாம் மாற்றி விட்டோம் என வேதனை தெரிவித்தார். கடல் நீர் அதிகமாக வெப்பத்தை உள்வாங்குவதால் அமிலத்தன்மை அதிகரித்து இன்னும் 10 ஆண்டுகளில் மீன் இனங்கள் அழிந்து போகும் என எச்சரிக்கை செய்தார். அப்படியானால் கடல் காற்று இல்லாமல் போகும் - பருவக்காற்று மாறும் - பருவக்காற்று மாறினால் மழை வராது என்றும் எச்சரித்தார்.