உடல்குறைப்பு அறுவை சிகிச்சை ; உயிரிழந்த இளைஞர் - மருத்துவமனையை மூட அதிரடி உத்தரவு!
கொழுப்பு நீக்கு அறுவை சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தனியார் மருத்துவமனையை மூட உத்தரவிட்டுள்ளது.
அறுவை சிகிச்சை
புதுச்சேரி, டி.வி.நகரை சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரட்டை மகன்கள்(26) உள்ளனர். இதில் ஹேமச்சந்திரன் டிசைனிங் பணியில் இருந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட்டாக உள்ளார்.
ஹேமச்சந்திரன் உடல் எடை சுமார் 150 கிலோவுக்கும் மேல் இருந்ததால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார். அதன்படி, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க முடிவு செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதிரடி உத்தரவு
தொடங்கிய 15 நிமிடங்களிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.உடல்நல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுத்ததில் பிரச்சினை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அதிலும், மருத்துவனையில் உடல்குறைப்பு தொடர்பான சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லை என்பதும், மருத்துவமனையில் போதுமான டெக்னீசியன்கள் இல்லை என்பதும் தெரியவந்தது.
மேலும், சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து உரிய கையெழுத்து பெறவில்லை. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.