உடல் எடையை குறைக்க ஆப்ரேஷன்; இளைஞர் உயிரிழப்பு - தந்தை கோரிக்கை!

M K Stalin Chennai Puducherry Death
By Sumathi Apr 25, 2024 03:03 AM GMT
Report

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

உடல் எடை குறைப்பு

புதுச்சேரி, டி.வி.நகரை சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரட்டை மகன்கள்(26) உள்ளனர்.

ஹேமச்சந்திரன்

இதில் ஹேமச்சந்திரன் டிசைனிங் பணியில் இருந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட்டாக உள்ளார். ஹேமச்சந்திரன் உடல் எடை சுமார் 150 கிலோவுக்கும் மேல் இருந்ததால் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்துள்ளார்.

தினமும் இந்த 5 உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல்எடை கிடுகிடுவென குறையுமாம்!

தினமும் இந்த 5 உலர் பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல்எடை கிடுகிடுவென குறையுமாம்!

இளைஞர் பலி

அதன்படி, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க முடிவு செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடங்கிய 15 நிமிடங்களிலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உடல் எடையை குறைக்க ஆப்ரேஷன்; இளைஞர் உயிரிழப்பு - தந்தை கோரிக்கை! | Man Died Due To Weight Loss Surgery Puducherry

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், தந்தை செல்வநாதன் எந்த சோதனையும் இல்லாமல் இப்படி செய்துவிட்டாரகள். இந்த மருத்துவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.