உடல் எடை குறைப்பு: 26 வயது பெண் டாக்டருக்கு ஜிம்மில் நேர்ந்த சோகம் - அதிர்ச்சி சம்பவம்!

Tamil nadu Chennai Heart Attack Death
By Jiyath Nov 24, 2023 05:23 AM GMT
Report

26 வயது பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் மருத்துவர் 

சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்விதா(26). இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக அன்விதா, நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு சென்று வந்துள்ளார்.

உடல் எடை குறைப்பு: 26 வயது பெண் டாக்டருக்கு ஜிம்மில் நேர்ந்த சோகம் - அதிர்ச்சி சம்பவம்! | Young Doctor Died After Warm Up In Gym Chennai

இந்நிலையில், நேற்று இரவு உடற்பயிற்சி கூடத்தில் வார்ம்-அப் செய்து கொண்டிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். உடனடியாக அங்கு உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மற்றோரு மருத்துவர் அன்விதாவுக்கு முதல் சிகிச்சை அளித்துள்ளார் .

பெற்றோர் இருந்தும் தனிமை: 'அம்மாக்கு என்னை பிடிக்காது' - 4 வயது குழந்தையின் கண்ணீர் Video!

பெற்றோர் இருந்தும் தனிமை: 'அம்மாக்கு என்னை பிடிக்காது' - 4 வயது குழந்தையின் கண்ணீர் Video!

மாரடைப்பால் மரணம் 

பின்னர் உடற்பயிற்சி மைய ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே அன்விதா பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் எடை குறைப்பு: 26 வயது பெண் டாக்டருக்கு ஜிம்மில் நேர்ந்த சோகம் - அதிர்ச்சி சம்பவம்! | Young Doctor Died After Warm Up In Gym Chennai

மேலும், அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக உடற்பயிற்சி கூடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கீழ்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.