பெற்றோர் இருந்தும் தனிமை: 'அம்மாக்கு என்னை பிடிக்காது' - 4 வயது குழந்தையின் கண்ணீர் Video!
தனது பெற்றோர் குறித்து 4 வயது சிறுவன் பேசிய வீடியோ ஒன்று அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மை கோல்டன் கிட்ஸ்
தென்கொரியாவில் ’மை கோல்டன் கிட்ஸ்’ என்ற பிரபல நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி பெற்றோர்கள் குழந்தை வளர்ப்பு குறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெறும் ஒரு நிகழ்ச்சியாகும்.
இதில் கியூம் ஜி-யூன் என்ற 4 வயது சிறுவன் தனது பெற்றோர் குறித்து கண்ணீர் மல்க பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் "உனக்கு அப்பா, அம்மா இருவரில் யாரைப் பிடிக்கும்’ எனக் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அந்த குழந்தை "எனக்குத் தெரியவில்லை.. வீட்டில் நான் எப்போதும் தனியாகத்தான் இருப்பேன். என்னுடன் யாரும் விளையாடமாட்டார்கள்.
தனியாகவே எப்போதும் இருப்பேன்’ என்று கூறினான். அந்தப் பதிலுக்கு பிறகு குழந்தையின் உள்ளுக்குள் இருக்கும் சோகமும் வீடியோவில் தெரிகிறது. இதனையடுத்து கேட்கப்பட்ட அப்பா குறித்த கேள்விக்கு "தனது தந்தை கோபமாக இருக்கும் போது அச்சுறுத்தும் வகையில் இருப்பார் என்றும் தன்னிடம் அன்பாகப் பேச வேண்டும் என்று நினைப்பதாகவும் அந்த சிறுவன் தெரிவித்தான்.
குழந்தையின் வேதனை
மேலும், தனது தாயார் குறித்து "அவருக்கு என்ன பிடிக்கவில்லை என நினைக்கிறேன்’ என கூறும்போது அந்தக் குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டுகிறது. அதன் பிறகு சில நொடிகள் அமைதியாக இருந்த அந்த சிறுவன் மீண்டும் தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்து பேசத் தொடங்கினான்.
"என் அம்மா நான் சொன்னதை எப்போதும் கேட்டதே இல்லை. எனக்கு அவருடன் விளையாட வேண்டும் என ஆசை. ஆனால், அவர் எப்போதும் என்னை திட்டிக் கொண்டே இருப்பார்" என்று அந்த சிறுவன் கூறினார். தன் பெற்றோரைப் பிரிந்து தனிமையில் இருக்கும் இந்த குழந்தையின் கண்ணீர் பேச்சு தற்போது உலகம் முழுவதும் வைரலாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்த குழந்தை தனது பெற்றோரால் மன ரீதியாக பாதிக்கப்புள்ளான். அதுதான் தற்போது வெளிப்பட்டிருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், குழந்தைகளை முறையாக வளர்க்க முடியவில்லை என்றால் எதற்காக பெற்றுக் கொள்கிறார்கள்? என்று நெட்டிசன்கள் பலரும் சாடி வருகின்றனர்.
I saw this I cried all night like damn pic.twitter.com/cdobMFnUqv
— Cindy ✨JUNGKOOK GF (@HobilovesCindy) November 20, 2023