6 வருடங்கள் முன் அறுவை சிகிச்சை - எடை குறைப்பு Influencer திடீர் மாரடைப்பால் மரணம்!
உடல் தோற்றத்தை மேம்படுத்தும் குறிப்புகளுடன் வெற்றிகரமான இன்ஃப்ளுயன்சராக திகழ்ந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இன்ஃப்ளுயன்சர்
அமெரிக்காவை சேர்ந்த மிலா டி ஜெசுஸ் 35 என்ற பெண் முக அழகு மற்றும் உடல் தோற்றத்தை மேம்படுத்தும் குறிப்புகளுடன் சமூக வலைத்தளங்களில் வெற்றிகரமான இன்ஃப்ளுயன்சராக திகழ்ந்தவர்.
உடல் எடையால் அவதிப்பட்ட மிலா, கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் எடை குறைப்பிற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனையடுத்து அவரின் உடல் நல்ல அமைப்பை பெற்றது.
திடீர் மரணம்
தனது உடல் எடை குறைப்பு குறித்து விரிவாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். மேலும், பல அழகு குறிப்புகளையும் தொடர்ந்து பதிவுகளாக வெளியிட்டு வந்தார்.
இதனால் மிலாவை இன்ஸ்டாகிராமில் சுமார் 60,000 பேரும், யூடியூபில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களும் பின் தொடர்ந்தனர். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், கடந்த வெள்ளிக்கிழமை மிலா உயிரிழந்தார். ஆனால் அவரின் திடீர் மாரடைப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.