தினமும் தாம்பத்திய உறவு.. உடலில் இந்த மாற்றத்தை உணர்வீர்கள் - இதை தெரிஞ்சுகோங்க!
தினமும் தாம்பத்திய உறவு கொண்டால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தாம்பத்திய உறவு
தாம்பத்திய உறவு கொள்வதால் மாரடைப்பு ஏற்படும் விகிதம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.இதய பிரச்சனைகள் வராமல் தடுக்க அல்லது குறைக்கத் தாம்பத்திய உறவு சிறந்ததாக இருக்கிறது.
அன்றாட வாழ்க்கையில் பணி ரீதியாகவோ அல்லது அலுவலகத்தில் ஏற்படும் பிரச்சனைகளால் மன அழுத்தம் இருப்பின் தாம்பத்திய உறவு கொள்வதன் மூலம் மனம் சற்று தளர்வடையும்.
அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருந்தால் தாம்பத்திய உறவு கொள்ளும்போது உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைத்து நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.தாம்பத்திய உறவின் போது மனிதனின் இதயத் துடிப்பு அதிகரிப்பதால் இரத்தம் பாய்வது சீராக உள்ளது.
நன்மைகள்
மேலும் இதனால் உயிரணுக்களுக்கு புதிய இரத்தம் கிடைப்பதாகத் தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றனர்.ஆணும் பெண்ணும் முழுமையான தாம்பத்திய உறவுக்குப் பிறகு புத்துணர்ச்சியை உணர்வீர்கள். முழுமையான தாம்பத்திய உறவு உங்களை ஆழ்ந்த தூக்கத்திற்குக் கொண்டு செல்லும்.
தூக்கமின்றி தவிக்கிறீர்கள் எனில் உங்கள் கணவர்/மனைவி உடன் தாம்பத்திய உறவு கொள்வதன் மூலம் உங்களுக்குத் தீர்வு கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.