காலையில் ஒரு டம்ளர் வெந்நீர்; அவ்வளவு நல்லது - ஆபத்தும் இருக்கு தெரியுமா?
இளஞ்சூடான வெந்நீருடன் நாளை தொடங்குவது பல நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
காலையில் வெந்நீர்
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம். இளஞ்சூடான நீர் இரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் ஓட்டத்தை மேம்படுத்த செய்கிறது.
வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் உடலில் இருக்கும் நச்சுக்களை அகற்ற உதவும். செரிமான உறுப்புகளை தூண்டி அன்றைய நாளில் உணவு ஜீரணிக்கும் வகையில் செயல்படுகிறது. இதனால் உணவு துகள்கள் திறம்பட உடைக்கப்படுவதால் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துக்களையும் திறம்பட உடல் உறிஞ்ச செய்கிறது.
என்னென்ன நன்மைகள்?
தினசரி மலம் கழிப்பதில் சிக்கலாக இருந்தால் மலச்சிக்கல் வராமல் தடுக்க காலை எழுந்த உடன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கலாம். மூக்கடைப்பு, மூக்கு நெரிசல் போன்றவை இருப்பவர்கள் வெந்நீர் குடிக்கலாம். இது மூக்கின் உள்புறம் இருக்கும் வீக்கத்தை குறைக்கிறது.
சளியை மெல்லியதாக மாற்றுகிறது. சைனஸ் அழுத்தத்தை போக்க செய்கிறது. பற்களில் உள்ள டார்ட்டர் மற்றும் ப்ளேக் கட்டமைப்பை அகற்ற செய்து ஒட்டுமொத்த பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. சூடான வெந்நீர் எடை இழப்பை மேம்படுத்துகிறது.
ஒரு கப் வெந்நீரை குடிப்பது மன அழுத்தம் குறைய உதவும். நினைவாற்றலையும் மேம்படுத்தும். இதில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் நீரை சரியான வெப்பநிலையில் குடிக்க வேண்டும். தண்ணீரின் வெப்பநிலை 130 டிகிரி ஃபாரன் ஹீட்டில் 160 டிகிரி ஃபாரன் ஹீட்டில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.