மட்டன் வாங்கினால் இதை கேட்டு வாங்குங்க - ஆட்டு கொழுப்பு நல்லதா?
ஆட்டின் கொழுப்பு அனைவருக்கும் நல்லதா? என்பது குறித்து பார்ப்போம்.
ஆட்டு கொழுப்பு
ஆட்டுக்கறியை பொறுத்தவரை, 100 கிராம் செம்மறி ஆட்டு கறியில் 136 கிராம், வெள்ளாட்டு கறியில் வெறும் 80 கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், வைட்டமின் B அதிகமுள்ளதால், உடல் எடை அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதிலும் ஆட்டுக்கறி உதவுகிறது. மட்டனிலுள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின் B12 போன்றவை சருமத்திற்கும் கூந்தலுக்கும் சிறந்தது.
நல்லதா?
ஆட்டின் தலை, இதயம் சார்ந்த வலிகளையும், கோளாறுகளையும் நீக்குவதுடன், குடலை வலிமையாக்க உதவும். தலை பகுதி எலும்பினை வலுப்படுத்தும். ஆட்டுக்கால்கள், உடலிலுள்ள எலும்புக்களுக்கு பலத்தையும், ஆற்றலையும் தரக்கூடியது. ஆட்டின் கண்களை சமைத்து சாப்பிடுவது வலிமையையும், தெளிவான பார்வையையும் கொடுக்கும்.
ஆட்டிறைச்சியை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடல் உறுப்புகள் பலம் பெறும். இதய நோயாளிகள், அதிக உடல் பருமன் உள்ளவர்கள், ஆட்டுக்கறியை தவிர்க்கலாம். எல்டிஎல் (கெட்ட கொழுப்பு) ஜீரணிக்க முடியாத அளவிற்கு என்சைம் குறைப்பாடு உள்ளவர்கள்,
ஆட்டிறைச்சி போன்ற நிறை கொழுப்புகள் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. இனி மட்டன் வாங்கும்போது, கொழுப்புகளையும் கூடுதலாக கேட்டு வாங்கலாம். ஆனால், குறைந்த அளவில் சாப்பிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.