மாணவர்களின் வாயில் செல்லோ டேப் ஒட்டிய தலைமை ஆசிரியை - அரசு பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்!
வகுப்பறையில் பேசிக்கொண்டிருந்த மாணவர்களின் வாயில் தலைமை ஆசிரியை ஒருவர் செல்லோ டேப் ஓட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளி
தஞ்சை மாவட்டம், அய்யம்பட்டியில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் புனிதா என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி வகுப்பறையில் மாணவர்கள் சிலர் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வகுப்பறையிலிருந்த தலைமை ஆசிரியை புனிதா கோபமடைந்துள்ளார். தொடர்ந்து மாணவர்கள் பேசிக் கொண்டிருக்கவே ஒரு மாணவி உட்பட 5 மாணவர்களின் வாயில் செல்லோ டேப்(Cello Tap) ஒட்டி பல மணி நேரமாக வகுப்பறையில் உட்கார வைத்துள்ளார்.
Cello Tap
இந்த சம்பவத்தை அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் போட்டோ எடுத்து சம்மந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு வாட்ச்ஸ் ஆப் மூலம் அனுப்பியுள்ளனர் . இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வகுப்பறையில் பேசிக்கொண்டு, இருந்ததால் மாணவர்கள் வாயில் செல்லோ டேப் தலைமை ஆசிரியர் ஒட்டிய சம்பவம் பேசுபொருளாகி உள்ளது.