பெண்கள் 9 வயதில் திருமணம் செய்யலாம் - புதிய சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு
பெண்களின் திருமண வயதை 9 ஆக குறைக்கும் சட்டதிருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
திருமண வயது
பெரும்பாலான நாடுகளில் திருமணம் செய்வதற்கான குறைந்த பட்ச வயதை அரசாங்கம் நிர்ணயித்துள்ளது. இதற்கு குறைந்த வயதில் திருமணம் செய்பவர்கள் அந்த நாட்டு சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.

இந்தியாவில் திருமணம் செய்வதற்கு குறைந்த பட்ச வயதாக ஆண்களுக்கு 21 மற்றும் பெண்களுக்கு 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு குறைந்த வயதில் திருமணம் செய்பவர்களை குழந்தை திருமணமாக கருதி சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
9 ஆக குறைப்பு
இந்நிலையில் ஈராக் நாடு பெண்களின் திருமண வயதை 18 லிருந்து 9 ஆக குறைக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. பெண்களை முறைகேடான உறவுகளிலிருந்து பாதுகாக்க இந்த சட்டதிருத்தை மேற்கொள்ள உள்ளதாக ஈராக் அரசு தெரிவித்துள்ளது.
இதனால், கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும் அபாயம், இளவயதில் கர்ப்பம் தரித்தல் ஆகிய காரணங்களை சுட்டிக்காட்டி பெண்கள் அமைப்பினர், மனித உரிமை குழுவினர் ஆகியோர் இந்த சட்டதிருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதெல்லாம் பொருட்படுத்தாத இராக் அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து மசோதாவை சட்டமாக இயற்றும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan
முஸ்லிம் பாதாள குழுவிலிருந்து கொலை அச்சுறுத்தலாம் : அமைச்சர் தர பாதுகாப்பு கோரும் ஞானசார தேரர் IBC Tamil