69 குழந்தைகளை பெற்று சாதனை படைத்த பெண் - எத்தனை வருடங்கள் கர்ப்பமாக இருந்தார் தெரியுமா?
பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
மக்கள் தொகை பெருக்கம்
தற்போது உள்ள மக்கள் தொகை பெருக்கத்தால் மக்கள் தொகையை குறைக்க 2 குழந்தைகள் போதும் என்று இந்திய அரசாங்கம் அறிவுறுத்தி வருகிறது. ஆனால் சில தலைமுறைகளுக்கு முன் 5க்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றுக்கொள்வது சகஜமாக இருந்தது.
அப்படியான சூழலில் பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
69 குழந்தைகள்
ரஷ்யாவின் ஷுயாவைச் சேர்ந்த விவசாயியான ஃபியோடர் என்பவரின் மனைவி வாசிலியேவ், 1725 மற்றும் 1765 ஆண்டுக்கு இடையில் 69 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகக் கூறப்படுகிறது. மொத்தத்தில் அவர் தனது வாழ்நாளில் 27 முறை கருவுற்று இருக்கிறார்.
27 முறை கருவுற்றால் 69 குழந்தைகள் எப்படி சாத்தியம் என பலருக்கும் கேள்வி எழலாம். இதில் 16 முறை இரட்டை குழந்தைகளையும், 7 முறை ஒரே அடியாக மூன்று குழந்தைகளையும், 4 முறை 4 குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.
இவர் ஏறக்குறைய தனது வாழ்நாளில் 18 ஆண்டுகள் பிரசவமாக இருந்துள்ளார். ஃபியோடர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். அவருக்கு 8 பிரசவத்தின் மூலம் 18 குழந்தைகள் பிறந்துள்ளன.