2 குழந்தைகளுக்கு விஷம் வைத்த தலைமைக் காவலரின் மனைவி - இறுதியில் நேர்ந்த கொடூரம்!

Death Salem
By Sumathi Oct 19, 2024 05:30 AM GMT
Report

தலைமைக் காவலரின் மனைவி 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடும்பத் தகராறு 

சேலம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் கோவிந்தராஜ் (38). இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு ரோஹித் (8), தர்ஷினி (4) என இரண்டு குழந்தைகள் இருந்தனர்.

2 குழந்தைகளுக்கு விஷம் வைத்த தலைமைக் காவலரின் மனைவி - இறுதியில் நேர்ந்த கொடூரம்! | Head Constables Wife Suicide Killed Daughters

கோவிந்தராஜ் தனது குடும்பத்தினருடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு சம்பவம்!

அரசு பள்ளி வகுப்பறையில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை - பரபரப்பு சம்பவம்!

சிதைந்த குடும்பம்

இந்நிலையில், சங்கீதா தூக்கில் நிலையிலும், அருகே அவரது குழந்தைகள் இருவரும் என அவனைவரும் சடலமாக கிடந்துள்ளனர். உடனே தகவலின் பேரில் விரைந்த போலீஸார், மூவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில்,

2 குழந்தைகளுக்கு விஷம் வைத்த தலைமைக் காவலரின் மனைவி - இறுதியில் நேர்ந்த கொடூரம்! | Head Constables Wife Suicide Killed Daughters

குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்து, சங்கீதா அவரது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பின்னர் அவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், தலைமைக் காவலர் கோவிந்தராஜும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட போலீஸார், தற்போது அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.