காவலர் தூக்கிட்டு தற்கொலை..இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் -நிலைகுலைந்த குடும்பம்!
குடும்ப தகராறு காரணமாகக் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவலர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து குமார். இவர் 10 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்குச் சங்கரி என்ற மனைவியும், இளமாறன் மற்றும் சஞ்சய் (11) என்ற ,மகன்கள் உள்ளனர்.
மேலும் இசக்கிமுத்து குமார், சென்னை கோயம்பேடு காவல்துறை நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு காவலராக பணிபுரிந்து வந்தார். தினமும் விருகம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டிற்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்த காவலர் இசக்கிமுத்து குமார், தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டிக்கொண்டார். அதன்பிறகு மாலையில் பள்ளி முடிந்து அவரது மூத்த மகன் இளமாறன் வீட்டுக்கு வந்து பார்த்த போது இசக்கிமுத்துகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மூத்த மகன் இளமாறன் அலறல் சட்டத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இசக்கி முத்துக்குமார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இசக்கி முத்துக்குமாரின் மனைவி உள்ளிட்டோரிடம் காவல்துறை விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன் இசச்கிகுமார் எழுதிய கடிதம் கிடைத்தது.
அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும் பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்குமாறு தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாகக் காவலர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
சில தினங்களாக பணியிட மாற்றம் கேட்டு வந்ததாகவும், அது கிடைக்காததால் மன உளைச்சலிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.