பெண்ணின் மூளையை வறுத்து சாப்பிட்ட இளைஞர் - அதிர்ந்த போலீஸ்
பெண்ணின் மூளையை வறுத்து சாப்பிட்டதாக இளைஞர் தெரிவித்தது காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரத்தக் கறையுடன் சூட்கேஸ்
சென்னையை அடுத்த துரைப்பாக்கம் குமரன் நகர் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்தக் கறைகளுடன் சூட்கேஸ் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சூட்கேஸைத் திறந்து பார்த்தபோது, பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிச் சென்றது தெரியவந்துள்ளது.
போலீஸ் விசாரணை
இதனையடுத்து பெண்ணின் உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கினர்.
விசாரணையில் கொல்லப்பட்ட பெண் சென்னை மணலியை சேர்ந்த பாலியல் தொழிலாளியான தீபா(32) என தெரியவந்துள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை துரைப்பக்கத்தில் உள்ள அக்கா வீட்டில் தங்கி, கார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
மூளையை சமைத்த கொடூரம்
இவர் கடந்த 16 ஆம் தேதி, தீபாவை தன்னுடன் 3 நாட்கள் தனியாக தங்குமாறு அழைத்துள்ளார். அழைப்பதற்கு முன் ரூ.6,000 கேட்டவர்,வந்த பின் ரூ.12,000 வேண்டுமென கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் சுத்தியலால் தீபாவின் தலையில் அடித்துள்ளார்.
இதில் உயிரிழந்த தீபாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்து அருகில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். இதில் உடலை துண்டு துண்டாக வெட்டும் போது பெண்ணின் மூளையை சமைத்து சாப்பிட்டதாக தெரிவித்தது காவல் துறையினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.