புதிய பயிற்சியாளர் கம்பீர்.. சம்பளம் அத்தனை கோடி - அதுபோக இவ்வளவு சலுகைகளா..?
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் சலுகைகள் பற்றிய தகவல்.
கவுதம் கம்பீர்
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதன் மூலம் 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த தொடருடன் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலமும் முடிவுக்கு வந்தது.
இதையடுத்து புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். ஊடக அறிக்கைகளின்படி, முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆண்டுக்கு ரூ.12 கோடி சம்பளம் பெறுகிறார். இதைவிட கூடுதலாக கம்பீர் சம்பளம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சலுகைகள்
மேலும், பல சலுகைகளை பெறவும் அவர் தகுதி பெற்றுள்ளார். அதாவது, பயிற்சியாளருக்கு பணியின்போது நாளொன்றிற்கு சுமார் ரூ.21,000 அலவன்ஸாக வழங்கப்படுகிறது. இந்த தொகை வெளிநாட்டு பயணத்தின் போது இரட்டிப்பாக வழங்கப்படும்.
அதேபோல், பிசினஸ் கிளாஸ் விமான பயணம், தங்குமிடம் மற்றும் சலவை ஆகிய செலவுகளையும் பிசிசிஐ நிர்வாகமே ஏற்றுக்கொள்ளும். இந்திய அணி தொடர்பான பணியில் இருக்கும் போது உலகத்தரம் வாய்ந்த பயண அனுபவம் மற்றும் தங்குமிடத்தை பெறவும் கம்பீர் தகுதி பெற்றுள்ளார்.