போராடினால் பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை - விவசாயிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசு!
தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிரயோகிக்க அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டனர்.
விவசாய விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி உள்ளிட்ட 13 கோரிக்கையை வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி சலோ போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில், பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சக்தி வாய்ந்த டிராக்டர்கள், தடுப்புகள் என விவசாயிகள் போரட்டம் தீவிரம் அடைந்தது. விவசாயிகள் ஹரியானாவுக்குள் நுழைய முடியாதவாறு கான்கிரீட் தடுப்புச்சுவர்கள், இரும்பு முள் வேலிகள் என தடுப்புகள் அமைக்கப்பட்டதை அடுத்து , போலீசார்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
தேசிய பாதுகாப்புச் சட்டம்
இந்த மோதலில் 12 போலீசாரும், 3 விவசாயிகளும் படுங்காயம் அடைந்தனர். தொடர்ந்து, 4 கட்ட பேச்சுவார்த்தை முடிவு எட்டாத நிலையில், , 5-ம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்தார். அதன்பின், போராட்டம் இரண்டு நாளைக்கு நிறுத்தப்பட்டது.
For owners and operators of Poclains,JCBs:
— Haryana Police (@police_haryana) February 21, 2024
Pls do not provide your equipments to the protestors and withdraw them from the protest site if already done, as they may be used to cause harm to security forces. It is a non bailable offence and you may be held criminally liable.
இந்நிலையில், அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு போராட்டக்காரர்கள் சேதம் விளைவித்தால், அவர்களின் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்து இந்த இழப்பு ஈடு செய்யப்படும். எந்த ஒரு சாமானியருக்கும் சொத்து இழப்பு ஏற்பட்டிருந்தால், அவர் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இழப்பு குறித்த விவரங்களை தெரிவிக்கலாம்.
தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) 1980ன் கீழ், விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை முன்னெடுத்து வரும் விவசாய சங்க பிரதிநிதிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஹரியானா காவல்துறை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.