போட்டியில்தான் தோற்றோம்; ஆனால் போரில்.. ரவுஃபின் மனைவி சர்ச்சை பதிவு!
ரவுஃப் காட்டிய '6-0' சைகை பெரும் கண்டனங்களைப் பெற்றுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான்
ஐக்கிய அரசு அமீரகத்தில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போது சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ரவுஃப் மனைவி சர்ச்சை
இந்நிலையில், தான் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூப் இந்திய ரசிகர்களை பார்த்து ஆத்திரம் மூட்டும் சைகையை காண்பித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Haris Rauf never disappoints, specially with 6-0. pic.twitter.com/vsfKKt1SPZ
— Ihtisham Ul Haq (@iihtishamm) September 21, 2025
இதனைத் தொடர்ந்து ரவுஃப்-இன் மனைவி முஸ்னா மசூத், தனது இன்ஸ்டாகிராம் 'ஸ்டோரி'யில், கணவர் '6-0' சைகை காட்டும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "போட்டியில் தோற்றோம், ஆனால் போரில் வென்றோம்" (Lost the match but won the battle) என்று தலைப்பிட்டிருந்தார்.
இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பின் அந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சில மணி நேரத்தில் நீக்கப்பட்டது.