தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஹரிஹரன் இசைநிகழ்ச்சி - எங்கு, எப்போது நடைபெறும்?

Rambha Sri Lanka Dhivyadharshini Hariharan
By Sumathi Dec 18, 2023 12:52 PM GMT
Report

காலநிலை காரணமாக ஹரிஹரன் இசை நிகழ்ச்சியின் தேதி மாற்றப்பட்டுள்ளது.

ஹரிஹரன் இசை நிகழ்ச்சி

பிரபல பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி NORTHERN UNIஇன் ஏற்பாட்டில் வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கில் நடைபெறவிருந்தது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட ஹரிஹரன் இசைநிகழ்ச்சி - எங்கு, எப்போது நடைபெறும்? | Hariharan Live Concert In Srilanka Update

வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், Magic Home group யாழ் வருகையை பிரபலப்படுத்தும் நோக்கத்தோடு, இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியை யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரம்பா முதல் டிடி வரை..!! யாழில் இசை நிகழ்ச்சிக்கு வரும் திரை நட்சத்திரங்கள் - அனைவருக்கும் அனுமதி இலவசம்!!

ரம்பா முதல் டிடி வரை..!! யாழில் இசை நிகழ்ச்சிக்கு வரும் திரை நட்சத்திரங்கள் - அனைவருக்கும் அனுமதி இலவசம்!!

காலநிலை மாற்றம்

இதனை பிரபல தொகுப்பாளர் திவ்யதர்ஷனி(டிடி) தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிலையில், தமிழகத்தில் நிலவும் மோசமான காலநிலையால் விமான பயணங்கள் தடைப்பட்டுள்ளது. மேலும், முல்லைத்தீவு கிளிநொச்சி போன்ற பகுதிகளில் கடும் வெள்ள அபாயகரத்தினாலும் அங்குள்ள மக்கள் கலந்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

hariharan live concert

இதனை கருத்தில் கொண்டு இலவசமாக வழங்கப்படும் இந்த ஹரிஹரன் லைவ் கான்செர்ட் மற்றும் ஸ்டார் நைட் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 9ம் தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.